“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் […] நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.”

(யோவான் 13: 34–35)

நாங்கள் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளை போல சகோதர அன்பில் வாழ விரும்புகிற கிறிஸ்தவர்கள். இயேசுவின் வாழ்வையும் வார்த்தைகளையையும் ஆழமாய் கடைபிடித்து, கீழ்ப்படிய ஒருவருக்கொருவர் உதவி செய்கிறோம். இங்கே இருக்கிற கருத்துக்கள், எங்களுடைய அனுதின கூடுகை மூலமாய் புரிந்து கொண்டவைகள்.

கட்டுரைகள்

… சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள்- அப்போஸ்தலர் 2:37

கிறிஸ்துவுக்குப் பின் முப்பதாம் ஆண்டில், பல யூதர்கள் இந்தக் கேள்வியை கேட்டனர். பேதுருவின் வார்த்தைகளை கேட்டவர்கள், தங்கள் வாழ்க்கை சரியான பாதையில் இல்லை என்று உணர்ந்தனர். இதே கேள்வியை நாங்களும் எங்களிடம் கேட்டுக்கொண்டோம். வாழ்க்கையின் நோக்கத்தை யாரேனும் சிந்திக்கத் தொடங்கும்போது, இந்தக் கேள்வி இயல்பாகவே எழுகிறது — அவர் இந்துவானாலும் சரி, புத்தமதத்தவரானாலும் சரி அல்லது வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவராலும் சரி.

எங்களுடய பழைய வாழ்க்கையில் கஷ்டங்கள், போராட்டங்கள் இருந்த போது, “வாழ்க்கையின் நோக்கம் என்ன?”, “எங்கள் முடிவு எப்படி இருக்கும்?”, “மரணத்துக்குப் பிறகு எங்களுக்கு என்ன ஆகும்?”, “சரியான வழியும் சத்தியமும் எது?” இது போன்ற கேள்விகளைப் பற்றி சிந்தித்தோம். எல்லாருக்கும் ஒரே சத்தியமே. பல விதமான சாத்தியங்கள் இருக்க முடியாது. உதாரணத்திற்கு — கடவுள் இருக்கிறாரா இல்லையா? மரணத்திற்குப் பிறகு ஏதாவது இருக்கிறதா? இருந்தால் அது என்ன?

கடவுளைப் பற்றி அறிய நாம் விரும்பினால், இந்தக் கேள்விகளையும் அறிய விருப்பம் கொள்ள வேண்டும். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் மிகவும் கடினமானவை அல்ல. அதற்கு விசேஷமான ஞானம் தேவையில்லை. இயேசுவின் மூலம் ஒவ்வொருவரும் சத்தியத்தை அறிய முடியும்.

வாருங்கள், இயேசுவிடம்சென்று இந்தச் சத்தியத்தை அவர்மூலம் அறிந்துகொள்வோம்.