எங்களைப் பற்றி


நாங்கள் தேவனுக்காக நேர்மையாக வாழ முடிவெடுத்த கிறிஸ்தவர்கள். இந்த வாழ்க்கையில் நிலைத்து நிற்க தினமும் ஒருவருக்கொருவர் உதவி செய்கிறோம்.இந்த கால கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ சபைகள், வேதத்தில் இருக்கும் கிறிஸ்தவர்கள் போல வாழ்வது சாத்தியம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.வேதத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்த அன்பும், பரிசுத்தமும் இல்லாமல், எல்லா ஞாயிற்று கிழமை ஆராதனைக்கும் தவறாமல் சென்றால் அது வெறுமையானதே. இதே போல பெயர் கிறிஸ்தவர்களாக இருந்த நாங்கள் மனம் திரும்பி இயேசுவை பின்பற்ற முடிவெடுத்தோம்.

நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். (யோவான் 17:20–21)

இயேசு விரும்பிய இந்த ஐக்கியமும் அன்பும் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவர்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் பொருந்தும்.

விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்… (அப்போஸ்தலர் 4: 32).

மேலே சொல்லப்பட்ட வசனத்தை போல, நாங்களும் ஒரே இருதயம் மற்றும் ஒரே மனமுள்ளவர்களாக வாழ விரும்புகிறோம். தேவன் எங்களுக்கு உண்மையான சகோதர சகோதரிகளை கொடுத்ததற்காக நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். இந்த மாதிரியான ஒரு ஐக்கியம் தான் உலகத்திற்கு உதாரணமாக இருக்கும் என்று இயேசு விரும்பினார். இதன் மூலமாய் உலகம் கூட, தேவனுடைய அன்பை அறிந்து மனம் திரும்ப முடியும்.

எங்கள் மத்தியில் எவருக்கும் எந்த பதவியும் இல்லை. நாங்கள் ஒரு அமைப்பாய் இல்லாமல், ஒரு குடும்பத்தை போல வாழ்கிறோம். சபைக்கு பெயர் கொடுப்பது சரியானது இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம். சபையின் அடையாளம் அன்பும் ஒற்றுமையும்தான் — இதை இயேசு நமக்கு காட்டினார். இயேசுவின் போதனைகளில் நிலைத்திருக்கவும், இறுதிவரை நம் விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும் நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய விரும்புகிறோம்; இதுவே சகோதர அன்பு என்று நாங்கள் புரிந்துகொண்டோம்.

நாங்கள் இந்த காலத்தில் தங்களை போதகர்கள், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் என்று சொல்கிறவர்களின் போதனைகளை ஏற்றுக்கொள்வதில்லை. உதாரணமாக, வில்லியம் எம். பிரான்ஹாம், எலன் ஜி. வைட், ஜோசப் ஸ்மித், வாச்மேன் நீ, ஆன் சாங்-ஹொங் (Mother god), இன்னும் பலர். நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் அல்லது இறுதியிநாளின் பரிசுத்தர்கள் (மோர்மன்கள்)” போன்ற அமைப்பை சேர்ந்தவர்கள் அல்ல. தேவனுடைய வார்த்தையை புரிந்து கொள்ள, பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு கிறிஸ்தவனையும் நடத்துவார் என்று நம்புகிறோம். இதற்கு சத்தியத்தையும் கடவுளையும் நேர்மையாக மற்றும் நல்ல மனதோடு தேடினால் போதும் என்று நம்புகிறோம்.

இந்த ஒரு நம்பிக்கையில் நாங்கள் வேதத்தை ஒன்றாக படித்து, தேவனுடைய வார்த்தையின் மூலமாய் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்த்து கொள்கிறோம். நாங்கள் மற்றவர்களையும் தேவனுக்காக வாழ அழைக்கிறோம். வேதத்தின் படி வாழ விரும்புகிற அனைவரையும் தெரிந்து கொள்ள எங்களுக்கு மிகவும் விருப்பம்.