பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம்
தேவன் அனைத்து விசுவாசிகளையும் ஒரே மாதிரியாக நேசிக்கிறார். மேலும் எவராவது தேவனை பின்பற்ற முடிவெடுத்தால் தொடக்கத்திலேயே பரிசுத்த ஆவியை முழுமையாக கொடுக்கிறார். மனம் திரும்புவதும் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுவதும் தனித்தனியான நிகழ்வு அல்ல. தேவன் அவர்களுக்கு தன்னுடைய அன்பு மற்றும் உறவை முழுமையாக கொடுக்க விரும்புகிறார். இந்த ஒரு விசுவாசத்தை குறித்து இந்த கட்டுரையில் நாங்கள் எழுதி இருக்கிறோம்

புதிய ஏற்பாட்டில் ஞானஸ்நானம் என்ற வார்த்தையின் அர்த்தம்:
“பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறுதல்” என்ற சொல்லை நான்கு சுவிசேஷங்களில் பார்க்கலாம்:
மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.(மத்தேயு 3:11)
மாற்கு 1:8; லூக்கா 3:16; மற்றும் யோவான் 1:33 சுவிசேசத்திலும் இந்த வசனத்தை பார்க்கலாம். யோவான் ஸ்நானகன் இங்கே இயேசுவைக் பற்றி சொல்கிறார்: இயேசு பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவராக இருப்பார். அவர் யோவானை விட வல்லமையுள்ளவர். யோவான் ஜனங்கள் தங்கள் பாவங்களுக்காக வருந்தி மனம் திரும்ப அழைத்தார். பரிசுத்த ஆவியானவரின் மூலம், பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கான வல்லமையைக் கொடுக்க இயேசுவால் முடியும். யோவான் சொன்ன இந்த வாக்குத்தத்தம் கி.பி 30 ஆம் ஆண்டில் பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேறியது.
இயேசு அப்போஸ்தலர் 1:4–8 முன்னறிவித்த படியே, யூதர்களுக்கு பயந்து பூட்டப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் ஒளிந்திருந்த சீடர்கள் (யோவான் 20:19) பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற பிறகு மிகுந்த தைரியத்துடனும் ஞானத்துடனும் நற்செய்தியை அறிவிக்க தொடங்கியதை பார்க்கிறோம். (அப்போஸ்தலர் 2:14).
சீடர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்வதில் காலதாமதம்:
முதலில் சீடர்கள் கிறிஸ்துவை பின்பற்ற முடிவு செய்தனர், ஆனால் அவர்கள் ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறுவதற்கு கி.பி 30 பெந்தெகொஸ்தே வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த கால தாமதத்திற்கு காரணம் என்ன என்பதை இயேசு சில வசனங்களில் சொல்கிறார்.
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். (யோவான் 16:7)
பண்டிகையின் கடைசி நாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப் போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்த படியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை. (யோவான் 7:37–39)
மேலே சொன்ன வசனங்கள் போல, சீடர்கள் பரிசுத்த ஆவியை உடனே பெற்றுக்கொள்ளாதது தனித்துவமானது. இயேசுவை அவர்கள் பின்பற்ற முடிவு செய்திருந்தாலும் இயேசு மகிமை அடைத்த பிறகு தான் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்கள். ஆவியானவர் இன்னும் வெளிப்படுத்த படாததால் அவர்கள் உடனே பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும், பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தப்பட்ட பிறகு. இயேசுவை பின்பற்ற விரும்புபவர்கள் காத்திருக்க அவசியம் இல்லை. அவர்கள் கால தாமதம் இல்லாமல் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளலாம்.
காலதாமதமின்றி பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக் கொண்டார்கள்:
பெந்தேகோஸ்தே நாளுக்கு பிறகு, மனம் திரும்புவதும் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுவதும் தனித்தனியான நிகழ்வு அல்ல. எவராவது தேவனுக்காக கீழ்ப்படிந்து வாழ முடிவெடுத்தால், உடனே தேவன் அவனுடைய இதயத்தில் வாசம் செய்வார்.
நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். (யோவான் 14:16–17, 23)
இயேசு முதலில் பரிசுத்த ஆவியை அனுப்புவதைப் பற்றியும், பரிசுத்த ஆவி விசுவாசிகளுடன் இருப்பார் என்றும் சொல்கிறார். பின்னர் பிதாவையும் தன்னையும் பற்றிப் பேசுகிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், பரிசுத்த ஆவியைப் பெறுவதன் மூலம், மூவொரு தேவன் நம்மில் வந்து வாசம் பண்ணுவார்கள் என்பதாகும். நாம் மனந்திரும்பும் போது, பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் முழுமையாக நம்மில் வந்து வாசம் செய்வார்கள், சிறு சிறு பகுதியாக அல்ல. மூவொரு தேவன் நம்மிலே வாசம் செய்ய, நாம் அவரை நேசிக்கவும், அவருடைய வார்த்தையின் படி வாழ முடிவெடுக்கவும் வேண்டும். இந்த ஒரு நிலையில், தேவன் பரிசுத்த ஆவியானவரை முழுவதுமாக காலதாமதம் இன்றி விசுவாசிகளின் இருதயத்தில் ஊற்றுகிறார்.
மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. (ரோமர் 5:5)
ஒருபுறம், தேவனுக்காக வாழ விரும்பும் ஒருவனுக்குத் தேவன் தனது அன்பைக் குறைவாகக் கொடுப்பார் என்பது அவருடைய இயல்பிற்கு முரணான விஷயம். மறுபுறம், பரிசுத்த ஆவியானவர் தண்ணீரின் அலையை போன்றவர், அவரை பகுதியாக பிரிக்க முடியாது. அவருடைய கிரியை, ஒருவனுக்கு புத்துயிர் கொடுத்து, புத்துணர்ச்சி அளித்து, தாகத்தைத் தணிக்கும் தண்ணீருடன் ஒப்பிடப்படுகிறது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள், பரிசுத்த ஆவியை தண்ணீருக்கு உருவகத்தைப் வாக்குறுதி அளித்தனர். இந்த வசனங்கள் முழுமை அடைவதை பற்றி சொல்கிறது: (ஏசாயா 32:14–16; 44:1–5; 43:19–20; 41:17–20; 35:7; 55:1–2; 58:11; யோவேல் 3:18; எசேக்கியேல் 47:1–12)
பரிசுத்த ஆவியானவர் ஒரு நபராக இருப்பதால், அவர் ஒருவருடைய இருதயத்தில் இருக்கிறார் அல்லது இல்லை என்று மட்டுமே சொல்ல முடியும். அவர் இருந்தால், முழுமையாக ஒரு நபராக இருந்து நம்முடைய இருதயத்தை நிரப்புகிறார்.
ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும். அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரமாகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். (தீத்து 3:3–7)
இங்கே பவுல் மனந்திரும்புதல் பற்றிப் பேசுகிறார். ஒரு காலத்தில் நாம் கீழ்ப்படியாதவர்களாக இருந்தோம், ஆனால் தேவன் புத்துயிர் கொடுத்து, பரிசுத்த ஆவியால் புதுப்பித்து நம்மை இரட்சித்தார். அந்த ஆவியை அவர் நம்மேல் சம்பூரணமாய் ஊற்றினார். எனவே மனந்திரும்புதலும், பரிசுத்த ஆவியை முழுமையாக பெறுவதும் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வு, கால தாமதத்துடன் நிகழும் இரண்டு தனித்தனி நிகழ்வுகளாக சொல்ல முடியாது.
ஒருவர் ஆவியானவரை முழுமையாக பெறவில்லை என்றால், அவர் சுத்திகரிக்கப்படவில்லை மற்றும் புதுப்பிக்கப்படவில்லை. அதன் விளைவாக, அவர் இரட்சிக்கப்படவும் இல்லை, நீதிமானாக்கப்படவும் இல்லை, நித்திய ஜீவனுக்கு வாரிசாகவும் இல்லை (வசனம் 7).
வேறொரு வசனத்தில், பவுல் பரிசுத்த ஆவியை முழுமையாக பெறுவதையும் சபையின் உறுப்பினராக இருப்பதையும் இணைக்கிறார்.
எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். (1 கொரிந்தியர் 12:12–13)
எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். தாகந்தீர்க்கப்பட்டோம் என்பது பரிசுத்த ஆவியானவர் முழுமையாக ஊற்றப்பட்டார் என்பதை இன்னும் ஆழமாக வெளிப்படுத்துகிறது. மேலே சொன்னபடி, பரிசுத்த ஆவியானவர் ஒரு நபராக இருப்பதால், அவரை நாம் பகுதியாக பெற்று கொள்ள முடியாது. அவர் தன்னை குடிப்பதற்காக கொடுத்தால், முழுவதுமாக குடிக்க கொடுக்கிறார்; கொஞ்சம் இப்பொழுது கொடுத்து விட்டு, பின்னர் முழுவதுமாக கொடுப்பதில்லை. இந்த மாதிரியான போதனை, வேதம் வெளிப்படுத்துகிற தேவனின் குணத்திற்கு விரோதமாக உள்ளது.
பரிசுத்த ஆவியை முதலில் கொஞ்சம் பின்னர் முழுமையாக பெற்றுக்கொள்வதாக இருந்தால், அவர்கள் பெற்றுக்கொண்ட ஆவியின் அளவை பொறுத்து சபையில் இரண்டு பிரிவான கிறிஸ்தவர்கள் இருக்க வேண்டும். ஆனால் 1 கொரிந்தியர் 12, பவுல் சபையில் இருக்கும் ஒவ்வொருவரும் மிகவும் முக்கியமானவர்கள் என்று சொல்கிறார். ஏனென்றால், ஒரே ஆவி அவர்களுக்குள் வாசம் செய்கிறார். அந்த ஆவியின் மூலம் இயேசு தேவன் என்று அறிக்கை செய்கிறார்கள். மேலும் அதே ஆவியின் மூலம் பல வரங்களை பெற்றுள்ளார்கள்: 1 கொரிந்தியர் 12:3–11. வரங்களிலிலும், ஊழியத்திலும் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் பவுல் இங்கே பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வதில் வித்தியாசம் இருப்பதாக சொல்லவில்லை. 8 முதல் 10 வரை உள்ள வசனங்களில் சொல்லப்பட்ட அனைத்து வரங்களும் ஒருவர் ஆவியால் நிரப்பப்பட்டுள்ளார் என்பதின் அடையாளம். பெந்தகொஸ்தே சபையை சேர்ந்தவர்கள் சொல்லுகிறது போல, ஒருவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்று கொண்டதின் அடையாளம் அந்நிய பாஷை பேசுவது மட்டுமல்ல.
பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்தவர்கள், ஆவியில் ஞானஸ்நானம் பெறாதவர்வகளை மாமிச கிறிஸ்தவர்கள் என்று சொல்கிறார்கள். ரோமர் 8:1–17, பவுல் இதற்கு முரணாக எழுதுகிறார். மாமிசத்தின் படி வாழ்கிற கிறிஸ்தவர்கள் தேவனை பிரியபடித்த முடியாது. அவர்கள் மரித்து போவார்கள். கிறிஸ்தவர்கள் ஆவியால் கட்டப்பட்டு இருக்கிறார்கள். மாம்சமான அனைத்தையும் அழித்து விட்டார்கள். கிறிஸ்தவர்கள் ஆவியால் கட்டப்பட்டு இருக்கிறார்கள் என்பதின் அர்த்தம், ஆவியால் முழுமையாக நிரப்ப பட்டிருக்கிறார்கள் என்பதாகும். தேவன் தொடக்கத்தில் இருந்தே தன்னை முழுவதுமாக தன் பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். புதிதாக கிறித்தவனாக மாறிய கிறிஸ்தவன் வாழ்வில் பல போராட்டங்கள் இருக்கும் போது ஏன் சிறிதளவு ஆவியை மட்டும் கொடுக்க வேண்டும். இறுக்கமான இயேசுவின் வழியில் செல்ல முடிவெடுத்த அவனுக்கு தேவன் அனைத்தையும் முழுமையாக கொடுக்கிறார். இதன் மூலம் அவன் எடுத்த முடிவில் நிலையாக நின்று, தேவனோடு ஒரு ஆழமான ஒரு உறவை உண்டாக்கி, கீழ்ப்படிதல் உள்ள வாழ்க்கை வாழ முடியும்.
தமஸ்குவில் பவுலின் மனமாற்றம், ஆவியால் நிரப்பப்படுவதை மனம்திரும்புவதிலிருந்து பிரிக்க முடியாது என்பதற்கு சாட்சியாக உள்ளது. அப்போஸ்தலர் 9:17–18. அனனியா பவுலின் மேல் தன் கைகளை வைத்த போது, அந்நிய பாஷை பேசுவதோ அல்லது வேறு எந்த வெளிப்படையான ஆவியின் வரங்களை பெற்றுக்கொண்டதாக சொல்லவில்லை.
மேலும் அப்போஸ்தலர் நடபடிகள் 10:44–48-இல், கொர்நேலியு மனம்திரும்பிய போது, அவரும், அவருடைய குடும்பத்தினரும் தண்ணீரால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே பரிசுத்த ஆவியினால் ஊற்றப்பட்டார்கள். ஆனால் இன்றைய பெந்தகொஸ்தே சபையினரின் போதனையின் படி முதலில் மனதிரும்புதல், தண்ணீரால் ஞானஸ்நானம், பின்னர் ஆவியினால் ஞானஸ்நானம்.
நாம் மனம் திரும்பும்போது தேவன் பரிசுத்த ஆவியின் மூலமாய் நம்மோடு வாசம் செய்கிறார். இது அவரோடு உள்ள உறவு. நம்முடைய கீழ்ப்படிதல் அதாவது நல்ல தீர்மானங்கள், ஜெபம், மூலமாய் இந்த உறவை நாம் பலப்படுத்த முடியும். அதே வேளையில் கீழ்ப்படிதல் இல்லாத வாழ்க்கை இந்த உறவை பலவீனப்படுத்தும். எபேசியர் 5:18 இல் “ஆவியினால் நிறைந்து… அல்லது ஏபேசியர் 4:30 இல் “…தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் சொன்னது போல நாம் கீழ்ப்படிதல் உள்ள வாழ்க்கை வாழ்ந்தால், பரிசுத்த ஆவியானவர் நம்மில் பல காரியங்களை செய்ய முடியும். கலாத்தியர் 5:25-இல் கூட பவுல் சொல்கிறார்: “நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்”
அப்போஸ்தலர் 4:31 இல், கிறிஸ்தவர்கள் ஆர்வமாய் ஜெபித்த போது பரிசுத்த ஆவியால் அவர்களுடைய விசுவாசத்தில் மிகவும் பலப்படுத்த பட்டார்கள்.
அவர்கள் ஜெபம்பண்ணினபோது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரிமாய்ச் சொன்னார்கள். (அப்போஸ்தலர் 4:31)
“ஆவியினால் நிரப்பப்படுதல்” மற்றும் விசுவாசிகள் கஷ்டமான சூழ்நிலையில் உள்ள போது பரிசுத்த ஆவி எப்படி பலப்படுத்துகிறார் என்பதை பற்றியும் அப்போஸ்தலர் புஸ்தகத்தில் வாசிக்கலாம்: அப்போஸ்தலர் 4:5–10; அப்போஸ்தலர் 13:9–12. இது போன்ற ஒரு சூழ்நிலையில் ஒருவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுதல் என்பது வித்தியாசமானது. இது பரிசுத்த ஆவியானவரோடு உள்ள உறவின் தொடக்கம் அல்ல, மாறாக பரிசுத்த ஆவியின் பலத்தையும் உதவியையும் விசேஷமாக அனுபவிப்பது. அதாவது, பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தப்பட்ட போது ( அப்போஸ்தலர் 2:4) மற்றும் ஒருவர் மனம் திரும்பும் போது பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுதல் (அப்போஸ்தலர் 9:17) போல அல்ல.
ஒரு கிறிஸ்தவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார் என்று வாசிக்கும் போது, மற்ற கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறவில்லை என்று அர்த்தம் அல்ல. ஆனால், அவருடைய கீழ்ப்படிதல் மூலம் பரிசுத்த ஆவியின் கிரியை அவருடைய வாழ்க்கையில் தெளிவாகத் தெரிந்தது. (அப்போஸ்தலர் 6:5): ..அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனாகிய அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு…
முடிவு:
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒருவன் பாவத்திலிருந்து விட்டு விலகி இயேசுவை பின்பற்ற முடிவெடுக்கிறான். இந்த நல்ல முடிவிற்கு, தேவன் பரிசுத்த ஆவியை ஊற்றி தனது அன்பை வெளிப்படுத்துகிறார். அவனை தன் பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார். இந்த ஆவியின் மூலம், தன்னுடைய ஆத்மீக போராட்டத்தில் தேவனுடைய அன்பு, அமைதி மற்றும் பலத்தை அனுபவிக்கிறான். மேலும் தன் கிறிஸ்தவ சகோதரனையும் மற்றும் தேவனை அறியாதவர்களையும் நேசிக்க அவர் உதவி செய்கிறார். கிறிஸ்துவை பற்றிய சரியான போதனைகளை தெரிந்து கொண்டு, மற்ற கிறிஸ்தவர்களோடு ஐக்கியமாய் வாழ உதவி செய்கிறார். மனம் திரும்பிய பிறகு எந்த கிறிஸ்தவனும் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற காத்திருக்க அவசியம் இல்லை. ஏனெனில் தேவன் தன் அன்பான பிள்ளைகளுக்கு அனைத்தையும் முழுமையாக கொடுக்க விரும்புகிறார்.
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். (யோவான் 1:12–16)