கிறிஸ்தவர்களின் மத்தியில் ஒற்றுமை

கிறிஸ்தவர்களின் மத்தியில் உள்ள ஒற்றுமை என்றால் என்ன? —கிறிஸ்தவர்களுக்கு ஒற்றுமை என்பது போதனையில் மட்டுமல்ல, மனப்பான்மையிலும் அன்றாட நடைமுறை வாழ்க்கையின் கேள்விகளிலும் உள்ளது. இயேசு அவரை விசுவாசிக்கிறவர்களின் மத்தியில் உள்ள ஒற்றுமைக்காக ஜெபித்தார். 

நாம் ஒன்றாயிருக்கிறதுபோல, அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். (யோவான் 17: 22–23)

இது நடைமுறையில் சாத்தியம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த சபை ஒற்றுமை பற்றி வேதம் என்ன சொல்கிறது, மற்றும் நாங்கள் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் எழுதியிருக்கிறோம்.

இரண்டு வேறு விதமான வண்ணம் கொண்ட கயறு நல்ல இருக்கமாக கட்டப்பட்டுள்ளது. இந்த படதத்தை போல கிறித்தவர்களும் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்களாய் இருந்தாலும் ஒரு மனப்பட்டு வாழ முடியும்.

இயேசுவின் ஜெபமும் சீடர்களின் வாழ்க்கையும்

கிறிஸ்தவர்கள் எப்படி ஒற்றுமையாக வாழ முடியும்? ஒற்றுமை விசுவாசிகளின் மத்தியில் உள்ள அன்பிற்கு அடையாளம். இயேசு இந்த ஒற்றுமைக்காக ஜெபித்தார்.

நாம் ஒன்றாயிருக்கிறதுபோல, அவர்களும் ஒன்றாயிருக்கும்படி..(யோவான் 17: 22–23)

இயேசு செய்த இந்த கடைசி ஜெபம், சீடர்களிடையே இருக்கிற ஒற்றுமை இயேசுவுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது. இயேசு தனது பிதாவுடன் கொண்டிருந்த ஆழ்ந்த, பிரிக்க முடியாத ஒற்றுமை தான், அவரது சீடர்களிடையே உள்ள ஒற்றுமைக்கான ஒரு ஆதாரம். கிறிஸ்தவர்களிடையே உள்ள ஒற்றுமை என்பது மூவொரு தேவனின் கிரியையாகும். ஆகையால், தேவனின் பிரிக்க முடியாத இந்த இயல்பு அவருடைய பிள்ளைகளின் ஐக்கியத்திலும் இருக்க வேண்டும். இயேசுதனது ஜெபத்தில், சீடர்கள் ஒன்றாயிருக்கவும், (யோவான் 17:11, 17–24) அவர்களுடைய வார்த்தையைக் கேட்பவர்கள் ஒன்றாய் இருக்கவும் பிதாவை வேண்டுகிறார் (யோவான் 17:20–21). இந்த உதாரணம், சீடர்களிடையே உள்ள ஐக்கியம் மிகவும் ஆழமானது என்பதைக் காட்டுகிறது, ஏனெனில், இது பிதாவிற்கும் குமாரனுக்கும் இடையிலான உறவு. பிதா குமாரனுடனும், குமாரன் பிதாவுடனும் ஒன்றாக இருப்பது போலவே, சீடர்களும் இயேசுவின் மூலம் ஒன்றாக இருக்க முடியும்.

இந்த ஐக்கியம் உலகிற்கும், சத்தியத்தைத் தேடும் மக்களுக்கும் (யோவான் 17:21,23) ஒரு அடையாளமாக உள்ளது, இது எட்ட முடியாத ஒரு இலட்சியம் அல்ல. கீழே உள்ள வசனங்களில் இந்த ஐக்கியத்தை முதலாம் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் பார்க்க முடியும்.

இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். (அப்போஸ்தலர் 2: 37–38)

அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்… (அப்போஸ்தலர் 2: 41)

அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, …(அப்போஸ்தலர் 2: 46)

விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள…(அப்போஸ்தலர் 4: 32)

இந்த விசுவாசிகள் தேவனோடும் மற்ற கிறிஸ்தவர்களுடனும் ஐக்கியத்தைத் தேடுவதால், அவர்கள் வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வந்தாலும், தேவன்அவர்களை ஒன்றாக வழி நடத்தினார். ஒவ்வொரு மனிதனும் மனந்திரும்ப வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், அதைச் சாத்தியமாக்க அவர் அனைத்தையும் செய்கிறார்.

கிறிஸ்தவர்களின் மத்தியில் ஐக்கியம் என்பதென்ன?

போதனைகளில் ஐக்கியம்

அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். (அப்போஸ்தலர் 2: 42)

அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால்,…(அப்போஸ்தலர் 17: 11)

பின்பு பவுல் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டுவந்தான். சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாச்சாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக்கொண்டுவந்தான். இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததிலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள். (அப்போஸ்தலர் 19: 8–10)

இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய். (1 தீமோத்தேயு 4:6)

கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: (2தீமோத்தேயு 3:13–17)

கிறிஸ்துவிடம் இருந்து வந்த அப்போஸ்தலர்களின் போதனையை தெரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை இந்தப் வசனங்கள் விளக்குகின்றன. பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு கிறித்தவனையும், தேவனைத் தேடும் ஒவ்வொருவரையும் இந்த சரியான போதனைக்கு வழிநடத்துகிறார்.

அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். (யோவான் 20:29)

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். (யோவான் 16:13)

நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். (யோவான் 14:16–17)

இயேசுவை ஏற்றுக்கொண்ட விசுவாசிகள், “ஆவியிலும் சத்தியத்திலும் பிதாவை ஆராதிக்க” விரும்புவதால்,வசனத்தை சரியான முறையில் புரிந்து கொண்டு ஐக்கியமாக வாழ தேவன் அவர்களுக்கு உதவி செய்கிறார்.  (யோவான் 4:23–24, பிலிப்பியர் 2:1–2)

தவறான போதனைகளை தெரிந்து கொள்ள சத்தியத்தை நேசிக்கும் திறந்த மனமுடையவர்களைத் தேவனுடைய ஆவியானவர் சரியான முறையில் புரிந்து கொள்ள வழி நடத்துவார் (எபேசியர் 4:1–6) தேவன் ஒவ்வொரு கிறிஸ்தவரும்…

அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,… (எபேசியர் 4:13–14)

ஆரம்பத்திலிருந்தே, சரியான போதனையிலிருந்து விலகிச் செல்வது ஒரு ஆபத்தாக இருந்தது. எனவே இயேசுவும் அப்போஸ்தலர்களும், கிறிஸ்தவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், சரியான போதனையையும் தவறான போதனையையும் பகுத்தறியும் ஞானம் கொண்டவர்களாக இருக்குமாறும் எச்சரித்தனர். (1 கொரிந்தியர் 2:12–15)

நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. (தீத்து 2:1)

ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. (1 தீமோத்தேயு 6:20)

நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும், அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்;…(2 தீமோத்தேயு 3:9–10)

ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குத்தத்தங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்;… (1 தீமோத்தேயு 6:3–4)

தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. (2 தீமோத்தேயு 3:4)

விசுவாசிகளுக்கு மத்தியில் உள்ள ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது, பழைய ஏற்பாட்டு விசுவாசிகளின் மத்தியிலும் பார்க்க முடியும்.

மனப்பான்மை மற்றும் நடைமுறை வாழ்க்கையில் ஒற்றுமை

நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். (பிலிப்பியர் 2:2)

சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். (பிலிப்பியர் 3:17–18)

ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். (1 கொரிந்தியர் 4:16–17)

ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். (எபேசியர் 4:1–6)

நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக. (ரோமர் 15:5–6)

மேலே சொல்லப்பட்ட வசனங்கள் மற்றும் கருத்துக்களின் அர்த்தம் நாம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எனபதை குறிக்கவில்லை, மாறாக ஒவ்வொரு சகோதரனும் தனது சொந்த வரங்களையும் திறமைகளையும் கொண்டு, சபையை, அதாவது கிறிஸ்துவின் உடலைக் கட்டியெழுப்ப முயற்சி செய்கிறான் என்பதை வெளிப்படுத்துகிறது. (1 கொரிந்தியர் 12:4,13 மற்றும் எபேசியர் 4:16) ஒவ்வொரு உறுப்பின் பணியும் முக்கியத்துவம் கொண்டது. (1 கொரிந்தியர் 12:14–27).

வேத வசனத்துக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லை என்று வேதம் சொல்லுகிறது.

நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும் அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்;…(2 தீமோத்தேயு 3:9–10)

ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். (எபேசியர் 5:1–2)

நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். (யோவான் 13:35)