யார் கடவுள்?
மக்கள் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புகிறதில்லை. ஏனெனில் அவர்கள் பல கடவுளைப்பற்றிய தவறான எண்ணங்களை கேட்கிறார்கள். சிலர் அவரை கேலி செய்கிறார்கள், சிலர் அவரை கொடூரமானவர் என்று சொல்லுகிறார்கள். மக்கள் பட்சபாதமுடைய கருத்துக்களால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கடவுளின் குணங்களையும் பண்புகளையும் பற்றிய சில சிந்தனைகளை நாம் எழுதியுள்ளோம். இதை பற்றி நாம் வேதாகமத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

கடவுளே அனைத்திற்கும் ஆதாரம்
யாரும் கடவுளை உருவாக்கவில்லை. இந்த விஷயத்தில் கடவுள் இந்த உலகில் உள்ள மற்ற எல்லாவற்றிலும் மாறுபட்டவர். கடவுளே ஒருவரே எந்த ஆரம்பமும் இல்லாதவர். மற்ற அனைத்தும் அவரைச் சார்ந்தவையாகும்.
அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்(எரேமியா 10:12)
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. (யோவான் 1:3)
அவரே காலத்தை உருவாக்கியவர்; காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவராக இருக்கிறார். அவருக்கு தொடக்கம் இல்லை, முடிவும் இல்லை, மேலும் அவர் மாறாதவர்.
பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். (சங்கீதம் 90:2)
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். (2 பேதுரு 3:8)
கடவுள் எல்லையற்றவரும் எங்கும் நிறைந்தவரும்
அவரே இடத்தையும் பொருள்களையும் உருவாக்கியவர்; ஆகையால் அவர் உண்டாக்கிய பொருள்கள் அவரை கட்டுப்படுத்த முடியாது. கடவுளுக்கு உடல் இல்லை; ஆனால் அவர் ஆவியானவர். அவரை நிறங்களாலும் வடிவங்களாலும் வர்ணிக்க முடியாது; அவர் எப்படி இருப்பார் என்று நாமே கற்பனை செய்யவும் முடியாது. கடவுள் ஆண் அல்ல, பெண் அல்ல; இளைஞர் அல்ல, முதியவரும் அல்ல. ஆனால் கடவுளுக்கு உருவமோ தோற்றமோ இல்லை என்பதால் அவரைப் பற்றி எதுவும் அறிய முடியாது என்று அர்த்தமல்ல. அவர் தனது நல்ல குணங்களை நாம் அறிய அனுமதிக்கிறார். ஆனால் “அவர் இங்கு இருக்கிறார்” அல்லது “அவர் அங்கே இருக்கிறார்” என்று நினைத்து அவரை ஒரு இடத்தில அடைக்க முடியாது. கடவுள் எங்கும் இருக்கிறார், ஆனாலும் அவரைத் தேடுகிற ஒவ்வொருவருக்கும் அவர் அருகிலேயே இருக்கிறார்.
தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? (1 இராஜாக்கள் 8: 27).
உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. (அப்போஸ்தலர் 17:24)
கடவுள் அனைத்தையும் அறிந்தவர்
காலமும் இடமும் கடவுளை கட்டுப்படுத்த முடியாததால், நடைபெறும் அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் — அனைத்தையும் அவர் முழுமையாக அறிந்திருக்கிறார். மேலும் ஒவ்வொரு மனிதரையும் முழுமையாக அறிந்திருக்கிறார்.
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். (சங்கீதம் 139:1–4)
ஆனால் இதற்கு அர்த்தம் நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் அல்லது நாம் செய்கிற எல்லாம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது அல்லது விதியில் எழுதப்பட்டது என்று பொருளல்ல. நாம் “எதிர்காலம்” என்று அழைக்கும் விஷயங்களை கடவுள் அறிந்திருக்கிறார், ஏனெனில் அவர் காலத்திற்குப் புறம்பானவராக இருப்பதால், அவை ஏற்கனவே நடந்ததாக அவர் காண்கிறார்.
கடவுள் நல்லவர்
கடவுள் முழுமையாக நல்லவர். நாம் அவருடைய அன்பை பெற தகுதியற்றவர்களாக இருந்தாலும் அவர் நம்மைப் பாதுகாக்கிறார் மற்றும் நமக்கு சிறந்ததை தர விரும்புகிறார். அதனால் நாம் அவரை நம்பலாம்.
… அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே, (லூக்கா 6:35)
கடவுள் நாம் அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக தன் உயிரை கொடுக்கவில்லை. அவர் நமக்கு நல்ல பரிசுகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தர விரும்புகிறார்.
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்தேயு 7: 7, 9,11)
நோய், இயற்கை பேரழிவு, அல்லது மனிதர்களின் தீமையால் ஏற்படும் வலியும் துன்பமும் பற்றி கேள்விப்பட்டால் பலர் மனம் கலங்கிப்போகிறார்கள். கடவுள் இருக்கிறார் எனில், அவர் நல்லவரா, அன்பான கடவுளா, அவர் இருந்தால் இத்தனை வலி மற்றும் நீதியின்மை ஏன் இருக்கிறது? என்று பல விதமான கேள்விகள். இந்த கேள்விகளுக்கு எளிதாக பதில் சொல்ல முடியாது. இந்த கேள்விகள் கடவுள் மேல் நம்பிக்கையுள்ளவர்களையும் மனம் கலங்க செய்கிறது.
கடவுள் நமது துன்பத்தை கவலைகளை பார்த்து மறைந்து கொள்ளவில்லை. நமது துன்பத்தின் போது கூட அவர் நம் அருகில் இருக்கிறவர். நாம் மிகவும் பலவீனமாக இருந்தாலும், அவருடைய அன்பை நாம் அனுபவிக்கலாம்.
கடவுள் நன்மையை நேசிக்கிறார், தீமையை வெறுக்கிறார். அவர் வெளிச்சத்தை போல பரிசுத்தமானவர்.
கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும் என் பரிசுத்தருமானவர் அல்லவா?… தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே… ஆபகூக் 1:12,13
இருள் என்பது மனிதர்கள் மறைக்க விரும்பும், வெட்கப்படும் எல்லா விஷயங்களும். இருளில் வாழ்ந்து கொண்டு அவரின் முன் நிற்க முடியாது. பரிசுத்தமாக வாழ முயற்சி செய்பவர்களுக்கு கடவுள் நெருக்கமாக இருக்கிறார். தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். (1 யோவான் 1:5,6)
கடவுள் உண்மையுள்ளவர் மற்றும் நீதிமான்
கடவுள் எப்போதும் நல்லதையே நேசிக்கிறவரானதால், அவர் நல்லது எது கெட்டது எது என்று வேறுபடுத்துகிறார். எனவே அவர் நியாயமாக தீர்ப்பளிக்கிறார். அவர் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்தவர், அதை பெற்றுக்கொண்ட நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை அவர் நியாயம் தீர்ப்பது சரியானது.
பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சங்கீதம் 75:3)
தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். (ரோமர் 2: 6–8)
வேதத்தில், கடவுளின் நியாயம் என்பது தீமையை தண்டிப்பது மட்டும் அல்ல. அது மனிதர்கள் மத்தியில் இருந்த பிரச்சனைகளை தீர்ப்பதையும் குறிக்கிறது. மேலும் கடவுளின் நியாயம் என்பது அநீதியை அனுபவிக்கும் மக்களுக்கு நீதியை கொடுத்து, பலவீனமானவர்களை கவனிப்பதும் ஆகும். கடவுள் யாரையும் காயப்படுத்த மாட்டார், யாரையும் குறைவாக நடத்த மாட்டார், யாருக்கும் சார்பாக நடக்க மாட்டார்.
அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். (அப்போஸ்தலர்10: 34,35)
கடவுள் நீதியை நேசிக்கிறார், அதனால் எல்லா மனிதரும் நீதியுள்ளவர்களாக வாழ்வதற்கு உதவ விரும்புகிறார்.
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். (மத்தேயு 5:6)
கடவுளின் அன்பு
கடவுளின் அன்பில் ஒரு சிறிய அளவும் சுயநலம் இல்லை. அனைவருக்கும் சிறந்ததைத் தரும் அவரது அன்பு, மனிதர்களின் அன்பை விட உயர்ந்தது. கடவுள் தன் அன்பின் சக்தியால் உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் உருவாக்கி தாங்கி வருகிறார். இந்த அன்பு மாறாதது; கடவுளின் விசுவாசம் மரணத்தையும் தாண்டி நிற்கும் அன்பாகும்.
தேவனே, நீர் என்னுடைய தேவன்,…ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது;… (சங்கீதம் 63: 1,3)
கடவுளின் மன்னிப்பில், அவருடைய தன்னலமற்ற அன்பு வெளிப்படுகிறது. அவரை வெறுக்கிற மனிதர்களை கஷ்டப்படுத்தவோ, வெறுக்கவோ, துன்பப்படுத்தவோ செய்ய மாட்டார். அவருடைய அன்பு எவரையும் கட்டுப்படுத்தாது, கட்டாயப்படுத்தாது துன்பப்படுத்தாது. அவருடைய அன்பு மறைமுகமாக வேலை செய்தாலும் வெளிப்படையாக தெரியும்.
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான் 4:7–8)
கடவுளின் அன்பு நம்மை ஒரு முக்கிய விஷயத்துக்குத் கொண்டு செல்கிறது: மனிதரின் சுய விருப்பம். நமது சுதந்திர விருப்பத்தின் அடிப்படையில் கடவுளை அன்பு செய்தால் செய்தால் மட்டுமே அவருடைய அன்பை உண்மையான அறிந்து அனுபவிக்கலாம்.